33
உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கொழும்பு – கோமகம பிரதேசத்தில் இன்று (12) காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வீதியோரத்தில் அடையாளம் காண முடியாதவாறு உருக்குலைந்த நிலையில் சடலம் காணப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.