0
யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
பருத்தித்துறை துறைமுக இறங்கு தளத்தில் இன்று (17) காலை குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளது.
இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.