கோட்டாபயவால் பிளவுபட்டுள்ள ராஜபக்ச குடும்பத்தினர் அனைவரும் கொழும்பில் ஒரு நிகழ்வில் ஒன்றாகத் தோன்றியுள்ளனர்.
இது தொடர்பில் தெற்கு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,
ராஜபக்ச குடும்பத்தவர்கள் அனைவரையும் மிக நீண்ட காலத்துக்குப் பின் ஒரே இடத்தில் ஒன்றாகக் காணும் வாய்ப்புப் பலருக்குக் கிடைத்தது.
அது அண்மையில் கொழும்பில் நடைபெற்ற இராஜாங்க அமைச்சர் டி.பி. சாணக்கவின் திருமணத்தில்.
ஜனாதிபதி, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், எம்.பிக்கள் என எல்லோரும் அந்தத் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
அதில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனியாகப் போய் ஓர் ஆசனத்தில் அமர்ந்துகொண்டார். இதைக் கண்ட இப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரைத் தேடித் சென்று அவருடன் சிறிது நேரம் பேசிவிட்டு வந்தார்.
நாமல் ராஜபக்ச அவரது மனைவி – பிள்ளையுடன் நுழைந்தார். அவரது மனைவி கர்ப்பிணியாக இருப்பதைக் கண்டவர்கள் அவருக்குச் சுகப் பிரசவம் ஏற்பட வேண்டும் என்று வாழ்த்துத் தெரிவித்தனர். அது இரண்டாவது குழந்தைக்கான கர்ப்பம். – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.