ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், உக்ரைனில் உள்ள வணிக மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை குறிவைத்து ரஷ்யா தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது.
அந்த வகையில், ஒடேசா நகரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பழமையான தேவாலயம் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலில் நேற்றுமுன்தினம் பலத்த சேதமடைந்தது.
இதில், தேவாலயத்தில் இருந்த இருவர் படுகாயமடைந்தனர். தேவாலயத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை பணியாளர்கள் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.