பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் இடம்பெற்ற அரசியல் கட்சி கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 35 பேர் உயிரிழந்தனர்.
ஜமியத் உலமா-இ -இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சி சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென குண்டு வெடித்தது.
இதில் கட்சியின் முக்கிய பிரமுகர் உள்பட சுமார் 35 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தாக்குதல் மனித குண்டு வெடிப்பு மூலம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.