பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்பாதுகாப்பு வீரர் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி பயணிகள் புகையிரதத்தில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டார்
இது தொடர்பில் மேலும் தெரியவருவது இந்த புகையிரதம் மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் புகையிரத நிலையம் வரும்போது புகையிரத பாதுகாப்புப்படை வீரர் ஒருவர், அவருடைய தானியங்கி துப்பாக்கி மூலம் மற்றொரு ஆர்.பி.எஃப் வீரரை சுட்டுள்ளார்.
அதோடு மேலும் 3 புகையிரத பயணிகளையும் சுட்டுள்ளார். இதில் நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் நடைபெற்ற புகையிரத நிலையம் மும்பையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ளது.