0
வீட்டில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவன் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார்.
இந்தக் கொடூர சம்பவம் வட கொழும்பு – மட்டக்குளியில் இன்று இடம்பெற்றுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தாயாரான பாலச்சந்திரன் செல்வமலர் (வயது 39) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையாளியான 43 வயதுடைய கணவன் வீட்டை விட்டுத் தப்பியோடியுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.