11
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கொழும்பு – கிருலப்பனையில் இன்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தைக் கலைக்கப் பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதனால் கிருலப்பனையில் பதற்றம் நிலவுகின்றது.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மதுசான் சந்ரஜித் உள்ளிட்ட 10 பேருக்கு கொழும்பின் பல இடங்களுக்குள் இன்று உட்பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.