சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தை பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் துறைமுகத்துடன் இணைக்கும் மிகப்பெரிய திட்டம் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டமாகும்.
இந்த திட்டப் பணிகளில் சீனாவைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு பாகிஸ்தானில் பாகிஸ்தானில் செயல்படும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
சீன அரசாங்கம் தங்கள் பிராந்தியத்தில் முதலீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த முதலீடுகளால் உள்ளூர் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்றும் கூறி அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் குவாடர் துறைமுகத்தில் உள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பொறியாளர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் இன்று நடத்தினர்.
அவர்களுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீன பொறியாளர்கள் தரப்பிலோ, பாகிஸ்தான் மக்கள் தரப்பிலோ யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.