1
சிம்பாவே அணியின் முன்னாள் வீரர் ஹென்றி ஒலங்கா,சிம்பாவே அணியின் முன்னாள் தலைவர் ஹித் ஸ்ட்ரீக் காலமானார் என்ற துயர் செய்தியை சமூக ஊடகங்களுக்குள் பகிர்ந்துள்ள நிலையில் அவரது தாயார் புலவாயே கறேன் மகன் இறந்து விட்டார் என்பது பொய்யான செய்தி என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் ஹித் உடம்பு சரியில்லை , ஆனால் அவர் உயிருடன் இருக்கின்றார் என்றும் கூறியுள்ளார்.
அவர் நலமாக இருக்கிறார், அவர் இப்போது இல்லை என்பது உண்மையல்ல. அந்தத் தகவலைத் தெரிந்துகொண்டு வெளியிட்ட முதல் நபர்களில் நானும் ஒருவனாக இருந்திருப்பேன்,” என்று ஸ்ட்ரீக்கின் நீண்டகால நண்பரும் ஆலோசகருமான ரெகோ என்பவரும் கூறினார்.