ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது அமர்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
“நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒற்றுமையை மீண்டும் உருவாக்குதல்” என்ற கருத்திட்டத்தின் கீழ் இம்முறை பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதேவேளை, கியூபாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள உச்சி மாநாடொன்றில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கியூபா விஜயத்தை நிறைவு செய்து கொண்டு ஜனாதிபதி அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.