இளைஞர் ஒருவர் தனது மகளைக் கேலி செய்ததால் ஆத்திரமடைந்த தந்தை, குறித்த இளைஞரை மார்பில் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு, கிராண்ட்பாஸ் – நவகம்புர பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பரமானந்தன் தினேசன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இளைஞரைக் கொலை செய்த நபர் நேற்று பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார் எனக் கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் கொலைக்குப் யன்படுத்திய கூரிய கத்தி, அவர் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த நண்பரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
……..