சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது கடந்த இரண்டு நாட்களாக விவாதம் நடைபெற்று வந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் விவாதம் இடம்பெற்று, மாலை வாக்கெடுப்பு நடத்தப்படும்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றிக்கொள்வதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் தீவிரம் காட்டி வருகின்றது. நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படும் உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது.
அதேவேளை, ஆளுங்கட்சியும் பேச்சுக்களை முன்னெடுத்து வருகின்றது.