கடந்த மாதம் 30ஆம் திகதி ஆரம்பித்த ஆசிய கோப்பை கிரிக்கெட் 2023 தொடரில் லீக் சுற்றுகள் அனைத்தும் முடிவடைந்து, தற்போது சூப்பர் 4 சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
சூப்பர் 4 சுற்றில், இந்தியா பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன.
இன்றைய சூப்பர் 4 சுற்று போட்டியில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதவுள்ளன.
முன்னதாக கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற போட்டியானது இந்தியா பேட்டிங் செய்து முடித்தவுடன் மழையின் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது, இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வீதம் கொடுக்கப்பட்டது.
இதனை அடுத்து இன்று (10) கொழும்பில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் சூப்பர் 4 சுற்றில் மோத உள்ளதால், ரசிகர்கள் இந்த போட்டியை ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த போட்டி வழக்கம் போல இலங்கை நேரப்படி மதியம் 3 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
மேலும் இந்த போட்டி மழையால் தடைப்படக்கூடாது என்பதற்காக, இன்றைய இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ‘ரிசர்வ் டே’ அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இன்று ஆட்டம் தடைபட்டால் நாளை (11) இதே போட்டி மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய இலங்கை கொழும்பு வானிலை நிலவரத்தின் படி, போட்டி நடைபெறும் பகுதியில் 90 சதவீதம் மழைபெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.