திருகோணமலை – சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சேருவில – காவன் திஸ்ஸபுர பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அதே பகுதியில் வசித்து வந்த குலங்கமுவே கெதர குலரத்ன (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம், பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த விபத்தில் படுகாயமடைந்த மற்றைய நபர் சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.