செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா வேறு சிறைக்கு இம்ரான்கானை மாற்ற உத்தரவு

வேறு சிறைக்கு இம்ரான்கானை மாற்ற உத்தரவு

0 minutes read

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70) மீது ஊழல் குற்றச்சாட்டு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதில் தோஷகானா ஊழல் வழக்கில் கடந்த மாதம் 5ஆம் திகதி அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

எனவே பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அவர் சிறைதண்டனை அனுபவித்து வருகிறார்.

இதனையடுத்து அவரது உடல்நலம், சமூக மற்றும் அரசியல் நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஏ-வகுப்பு வசதிகள் கொண்ட சிறைக்கு மாற்றும்படி இம்ரான்கான் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இதுகுறித்த வழக்கு விசாரணை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் அவரை ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு மாற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More