பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்தார்.
கந்தானையில் இடம்பெற்ற பல குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரே இவ்வாறு சாவடைந்தார்.
சப்புகஸ்கந்த பிரதேசத்தில் வைத்து 49 வயதுடைய அந்த நபரைப் பொலிஸார் கைது செய்ய முற்பட்டனர்.
அதன்போது பொலிஸாருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் அந்த நபர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தானை – பொல்பித்திமுகலான பகுதியில் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரே இவ்வாறு உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.