செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா பாதிக்கு மேல் குறைந்த எக்ஸ் சமூக வலைதள சந்தை மதிப்பு

பாதிக்கு மேல் குறைந்த எக்ஸ் சமூக வலைதள சந்தை மதிப்பு

1 minutes read

அமெரிக்காவை மையமாக கொண்ட பிரபல சமூக வலைதளம் எக்ஸ் (டுவிட்டர்). இந்த வலைதளத்தில் பயனர்கள் தங்கள் கருத்துக்களை செய்தி, புகைப்படம், ஆடியோ, வீடியோ, கோப்பு உட்பட அனைத்து வடிவங்களிலும் பிற பயனர்களுடன் பரிமாறி கொள்ளலாம்.

2006ல் அமெரிக்காவில் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தை, கடந்த 2022 அக்டோபர் மாதம், உலகின் நம்பர் 1 பணக்காரரும் அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க், சுமார் $44 பில்லியனுக்கு விலைக்கு வாங்கினார்.

எலான் மஸ்க், ‘டுவிட்டர்’ வலைதளத்தை விலைக்கு வாங்கியதிலிருந்து அதன் மதிப்பை உயர்த்த பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

முன்னதாக அதன் தலைமை செயல் அதிகாரியை மாற்றினார். பிறகு அவர் பல ஊழியர்களை பணி நீக்கம் செய்தார்; ஒரு சிலர் அவரது நடவடிக்கைகள் பிடிக்காமல் ராஜினாமா செய்தனர்.

தொடர்ந்து மஸ்க், வலைதளத்தின் பெயரை ‘எக்ஸ்’ என மாற்றினார். எக்ஸ் வலைதள உள்ளடக்கத்தை பயனர்கள் உபயோகப்படுத்த பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். பல இலவச சேவைகளை நிறுத்திய எலான் மஸ்க், சந்தா முறையில் சேவைகளை மாற்றியமைத்தார்.

இவரது செயல்முறைகளால் அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எலான் மஸ்க் விலைக்கு வாங்கி 1 வருடம் கடந்த நிலையில், தற்போது அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் $19 பில்லியன் என குறைந்துள்ளது.

இது அவர் விலைக்கு வாங்கிய விலையை விட பாதிக்கும் கீழே என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் நிறுவனமான எக்ஸை பங்குச்சந்தையில் பதிவு செய்ய திட்டமிட்டிருந்தார் எலான் மஸ்க். ஆனால், தற்போது அதன் சந்தை மதிப்பு மிகவும் குறைந்திருப்பதால், அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More