செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் 103,000 டொலருக்கு விற்பனையான டைட்டானிக் கப்பலின் உணவுப் பட்டியல்

103,000 டொலருக்கு விற்பனையான டைட்டானிக் கப்பலின் உணவுப் பட்டியல்

0 minutes read

டைட்டானிக் கப்பலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவுப் பட்டியல் 103,000 டொலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

சொகுசுப் பயணிகளுக்கான அந்த உணவுப் பட்டியலில் சிப்பிகள், மாட்டிறைச்சி, மல்லார்ட் வகை வாத்து ஆகியவை உள்ளன.

அது 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதிக்கான இரவு உணவுப் பட்டியல் இதுவாகும். டைட்டானிக் கப்பல் மூழ்கி அதில் இருந்த 1,500க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், உணவுப் பட்டியலின் ஒரு பகுதி தண்ணீரால் அழிந்துவிட்டது.

அது உயிர்பிழைத்த பயணியிடம் இருந்திருக்க வேண்டும் அல்லது உயிரிழந்த ஒருவரிடமிருந்து மீட்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஏல நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் பயணியிடமிருந்து மீட்கப்பட்ட பாக்கெட் கடிகாரம், மீட்புப்பணியின்போது பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் போர்வை ஆகியவையும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More