புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஆட்சியாளர்களுக்குச் சொர்க்கம்; மக்களுக்கு நரகம்! – சஜித் சாடல்

ஆட்சியாளர்களுக்குச் சொர்க்கம்; மக்களுக்கு நரகம்! – சஜித் சாடல்

1 minutes read
ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக ஆட்சியாளர்களுக்குச் சொர்க்கமும் மக்களுக்கு நரகமும்  காட்டப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

“வரவு – செலவுத் திட்ட உரையை ஆரம்பித்த ஜனாதிபதி பௌத்தத்தை அவமதித்தார். பிரார்த்தனை செய்ய வேண்டியவர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று புத்த பகவான் கூட போதித்தார். ஆனால், தற்போதைய ஜனாதிபதி பிரார்த்தனை செய்யவில்லை.

இது நாட்டு மக்களை ஏமாற்றும் முயற்சி. இந்த வரவு – செலவுத் திட்டத்தில் நரகம் பற்றிப் பேசினாலும், ஆட்சியாளர்கள் சொர்க்க லோகத்தில் உள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் வருவாய் இலக்குகளை நிறைவு செய்ய முடியாததால், அதன் இரண்டாவது கட்டக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில், ஏனோதானே அடிப்படையில் வரவு – செலவுத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் திட்டம் பற்றிப் பேச முன், 2023 ஆம் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளில் எத்தனை விடயங்களை நிறைவேற்ற முடிந்தது என்பது குறித்து சிந்திக்க வேண்டும் .

இன்று சமர்ப்பித்த வரவு – செலவுத் திட்ட முன்மொழிவில் பாரியளவிலான விடயங்களை நடைமுறைப்படுத்த முடியாதுள்ளது.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More