இன்று (18) மாலை இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கிப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். அந்த மோட்டர் சைக்கிள் வவுனியா, ஏ – 9 வீதி சாந்தசோலை சந்திப் பகுதியில் பயணித்த போது, எதிர்த் திசையில் இருந்து வயோதிபர் ஒருவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் சாந்தசோலை சந்தியில் திரும்ப முற்பட்டுள்ளது. இதன்போது இரு மோட்டார் சைக்கிள்களும் மோதி விபத்துக்குள்ளாகின.
விபத்தில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எனினும், பொலிஸ் உத்தியோகத்தரான இளைஞர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதே மரணமடைந்துள்ளார். மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிபர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் அக்கராயன் பகுதியில் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவில் பணிபுரியும் வெலிஓயா பகுதியைச் சேர்ந்த திஸாநாயக்கா (வயது 27), சாந்தசோலையைச் சேர்ந்த சண்முகம் நாதன் (வயது 63) ஆகிய இருவருமே மரணமடைந்தவர்களாவர்.
இந்த விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.