சர்வதேச நாடுகளில் ஒரே மாதத்தில் 52 சதவீதம் கொரோனா அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறவர்களின் எண்ணிக்கை சுமார் 3 ஆயிரம் ஆகியுள்ளது. இந்தியாவில் கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது.
கொரோனாவின் புதிய வகையான ஜே.என்.1 வைரஸ் தான் தற்போது அதிகரித்து வருவதற்கு காரணமாக உள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 சதவீதம் உயர்ந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில் உலக அளவில் 8,50,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த 28 நாட்கள் கால கட்டத்தோடு ஒப்பிடுகையில் 8 சதவீதம் குறைந்துள்ளது எனவும் கூறியுள்ளது.