சீனாவில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று தங்களிடம் வீடு வாங்கினால் உங்கள் மனைவியை இலவசமாக பெறுங்கள் என்று விளம்பரம் செய்துள்ளது.
குறித்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று, வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் கொடுத்த விளம்பரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள் மற்றும் சுவர் போஸ்டர்களில் இந்த விளம்பரம் தோன்றிய நிலையில், இந்த விளம்பரத்தை பார்த்த மக்கள் கோபமடைந்தனர்.
இதனையடுத்து, அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ரூ. 3 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விளம்பரத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று சொல்கிறார்கள். அதில் தங்கள் முயற்சியில் வீடு வாங்கி.. உங்கள் மனைவிக்கு கொடுங்கள் என்ற அர்த்தத்தில் கூறப்பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர்.