சீனாவில் ஷாங்காய் நகரை சேர்ந்த லியூ என்ற மூதாட்டி தனக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை தனது 3 குழந்தைகளும் பங்கீடும் வகையில் உயில் எழுதி வைத்தார்.
ஆனாலும் அந்த பெண் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட போது அவரது குழந்தைகள் 3 பேரும் ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை.
இதனால் ஆவேசம் அடைந்த அவர் தனது உயிலை மாற்றி எழுதி சொத்துக்கள் அனைத்தையும் தான் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகள் மீது எழுதி வைத்துள்ளார்.
இதனையடுத்து, கால்நடை மருத்துவமனை ஆரம்பித்து நாயையும், பூனையையும் நன்கு பராமரிக்க ஒரு விலங்குகள் நல நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.