பிலிப்பைன்சில் நெடுஞ்சாலையில் பயணித்த லொறியொன்று விபத்துக்கு உள்ளானதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
நீக்ரோஸ் ஒரியண்டல் மாகாணத்தில் உள்ள மபினாய் என்ற இடத்துக்கு அருகே வியாழக்கிழமை பயணித்த லொறி திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனையடுத்து, பள்ளத்தில் கவிழ்ந்து லொறி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வீதியில் நடந்து சென்றவர்கள் உள்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், படுகாயம் அடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.