கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில், 1,200 இஸ்ரேல் மக்கள் உயிரிழந்ததுடன், 240 பேர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, பதிலடி தாக்குதரை இஸ்ரேல் தொடங்கிய நிலையில், பாலஸ்தீனர்களில் மொத்தம் 29 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்து உள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகமும் தெரிவித்து இருந்தது.
அத்துடன், 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்து உள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், எகிப்திய எல்லையையொட்டிய தெற்கு பகுதியில் அமைந்த ரபா நகரை நோக்கி செல்ல திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், வருகிற மார்ச் 10ஆம் திகதி முதல் ரமலான் மாதம் தொடங்க உள்ளதால், “முஸ்லிம்களின் இந்த புனித மாதத்தின்போது, பணய கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு முன்வரும் என்றால், போரை நிறுத்த இஸ்ரேலும் முன்வரும்” என, அமெரிக்க ஜனாதிபதி பைடன் கூறியுள்ளார்.
இதற்காக அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டார் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கும் பணியை மேற்கொள்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.