உலகில் சக்தி வாய்ந்த இராணுவத்தை கொண்டுள்ள அமெரிக்க தரைப்படையில் 4 இலட்சத்து 50 ஆயிரம் வீரர்களும், 50 ஆயிரம் ரிசர்வ் படைவீரர்களும் உள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்க இராணுவத்துக்கான நிதியில் சிக்கன்தை கடைபிடிக்குமாறு அந்த நாட்டு நாடாளுமன்றம் கூறியுள்ளது.
இதனையத்து, இராணுவத்தில் ஆட்குறைப்பு செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி அமெரிக்க இராணுவத்தில் 5 சதவீதம், அதாவது சுமார் 25 ஆயிரம் தரைப்படை ராணுவ வீரர்களை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், வருங்காலத்தில் ஏனைய நாடுகளை சமாளிக்கும் வகையில் நவீன ஆயுதங்கள் உற்பத்திக்கான செலவை அதிகரிக்க உள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.