ஆப்கானிஸ்தானில் மகளிர்உரிமை மோசமான நிலையில் உள்ளது குறித்து தனது கரிசனையை வெளிப்படுத்தும் விதத்தில் அவுஸ்திரேலிய அணி ஆப்கான் அணியுடனான ரி 20 போட்டித்தொடரை இரத்துச்செய்துள்ளது.
மார்ச் மாதம் ஆப்கானிஸ்தானிற்கு எதிராக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருந்த போட்டியை பெண்கள் உரிமை வீழ்ச்சி குறித்த கரிசனைகளின் அடிப்படையில் இரத்து செய்திருந்த அவுஸ்திரேலியா தற்போது ரி 20 போட்டி தொடரையும் இரத்துச்செய்துள்ளது.
ஆப்கானில் தலிபானின் ஆட்சியின் கீழ் மகளிர் உரிமை நிலவரம் தொடர்ந்தும் மோசமடைந்துவருகின்றது என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன்கலந்தாலோசனைகளை மேற்கொண்ட பின்னர் ரி20 தொடரை இரத்துச்செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
ஆப்கானில் பெண்கள் யுவதிகளின் நிலைமை மோசமடைகின்றது என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது இந்த காரணத்தினால் நாங்கள் எங்கள் முந்தைய நிலைப்பாட்டை தொடர்ந்து பேணுவது எனவும் தொடரை இரத்துச்செய்வது என தீர்மானித்துள்ளோம் எனவும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.
உலகெங்கிலும் பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதை ஊக்குவிப்பதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.
2020 இல் தலிபான்கள் ஆட்சியைகைப்பற்றி பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு தடை விதித்ததன் பின்னர் இதுவரை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று தொடர்களை அவுஸ்திரேலியா இரத்துச்செய்துள்ளது.
2021 இல் அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த ஒரு டெஸ்ட் போட்டியும் இரத்துச்;செய்யப்பட்டது.