கடும் வெப்ப அலை காரணமாக 24 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த நிலை காணப்பவதாக ஐ.நா தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடும் வெப்பம் காணப்படும் நிலையில், பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என யுனிசெப் எச்சரிக்கின்றது.
வெப்பம் காரணமாக, கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் சுமார் 24 கோடி குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் இருதய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வீடுகளிலும், பாடசாலைகளிலும் குழந்தைகள் வெயிலில் விளையாடுவதை தவிர்ப்பதுடன், கோடை காலத்திற்கு ஏற்ற ஆடைகளை அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.