பிரான்ஸில் பாடசாலைக்கு அருகே நடத்தப்பட்ட கத்திக் குத்துத் தாக்குதலில் 6 மற்றும் 11 வயதுச் சிறுமிகள் இருவர் காயமடைந்துள்ளனர்.
11 வயதுச் சிறுமியை பாடசாலைக்கு வெளியே தாக்கிய நபர், 6 வயதுச் சிறுமியை வேறோர் இடத்தில் வைத்து தாக்கினார்.
இந்த நிலையில், சிறுமிகளைத் தாக்கிய நபர் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் சிறுமிகளுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்ட நிலையில், இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.