தெற்காசியாவிலும் தென்கிழக்காசியாவிலும் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில் சில பகுதிகளில் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்பம் காரணமாக பிலிப்பீன்ஸில் பாடசாலை வகுப்புகள் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன், தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பங்களாதேஷில் மக்கள் மழை வரவேண்டும் என்று வேண்டுதல் வைக்கின்றனர்.
பருவநிலை மாற்றத்தால் அனல்காற்று நீண்டகாலத்திற்கு இருக்கும் என்றும் அடிக்கடி வருவதுடன், கடுமையாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
நேற்று மட்டும் வெப்பக் குறியீடு குறைந்தது 30 நகரங்களில் 42 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் மேல் அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.