பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் அனைத்து சமூக வலைதள சேவையும் 6 நாட்களுக்கு தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொஹரம் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 13 முதல் 18ம் திகதி வரையில் இந்த தடை அங்கு அமலில் இருக்கும்.
வன்முறையை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என மாகாண அரசு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் வெறுப்பு பேச்சு மற்றும் தவறான கருத்து, தகவல் பகிரப்படுவதை தடுக்கலாம் என அந்த அரசு கருதுகிறது.
சுமார் 120 மில்லியன் மக்கள் இந்த மாகாணத்தில் வசித்து வருகின்றனர்.