1
இந்தோனேசியாவில் ஏராளமான சட்ட விரோத தங்க சுரங்கங்கள் இயங்கி வரும் நிலையில், அங்குள்ள சுலவேசி தீவில் கோரோண்டாலோ பகுதியில் இயங்கி வந்த சட்ட விரோத தங்க மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இடைவிடாது பெய்த மழையால் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன்போது, சுரங்கத்தில் தங்கத்தை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இந்த திடீர் மண்சரிவில் சிக்கினர்.
தற்போது வரை 11 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மாயமான 19 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.