அமெரிக்காவின் கலிபோர்னியாவில் புதன்கிழமை இரவு மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அல்மேடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் தமக்கு அறிவிக்கப்பட்டதாக பொலிஸார் தங்கள் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் வந்த போது, அங்கிருந்த பலர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி இருந்ததாகவும், காயமடைந்தவர்களில் குழந்தைகளும் இருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணத்தை பொலிஸார் உடனடியாக தெரிவிக்கவில்லை.
பாதிக்கப்பட்ட மூன்று பேர் உயிர் பிழைக்கவில்லை என்பதையும், கூடுதல் குடும்ப உறுப்பினர்கள் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.