33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று தொடங்கும் நிலையில், தொடக்க விழாவை புகழ்பெற்ற சென் நதி கரையில் நடத்துகிறார்கள்.
ஒலிம்பிக் வரலாற்றில் தொடக்க விழா மைதானத்துக்கு வெளியே நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.
ஒலிம்பிக்கால் பாரிஸ் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், வீடுகள் இன்றி வீதியோரம் வசித்த மக்களை அங்குள்ள பாதுகாப்பு படையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
வீதியோரம் வசித்தவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்காவில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள்.
ஒலிம்பிக் போட்டிகள் முடியும் வரை இவர்களை தற்காலிக முகாம்களில் தங்க வைக்க பிரான்ஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.