பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் இலங்கை சார்பாக இதுவரை பங்குபற்றிய கங்கா செனவிரட்ன (நீச்சல்), கய்ல் அபேசிங்க (நீச்சல்), விரேன் நெத்தசிங்க (பாட்மின்டன்), தருஷி கருணாரட்ன (மெய்வல்லுநர்) ஆகிய நான்கு இலங்கையர்கள் முதல் சுற்றுடன் வேளியேறிய நிலையில் அருண தர்ஷன இன்றைய தினம் நடைபெறவுள்ள ஆண்களுக்கான 400 மீற்றர் தகுதிகாண் சுற்றில் 5ஆவது போட்டியில் பங்குபற்றவுள்ளார்.
இப் போட்டி இன்று இரவு 10.35 மணிக்கு ஆரம்மாகவுள்ளது.
தகுதிகாண் சுற்றின் 5ஆவது போட்டியில் அருண தர்ஷன பங்குபற்றுகிறார்.
இலங்கை சார்பாக பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்குபற்றும் ஐந்தாவது வீரர் அருண தர்ஷன ஆவார்.
6 போட்டிகளைக் கொண்ட தகுதிகாண் சுற்றில் மொத்தமாக 46 வீரர்கள் பங்குபற்றவுள்ளனர். அவர்களது அதிசிறந்த நேரப் பெறுதிகளின் பிரகாரம் 41ஆவது இடத்தில் அருண தர்ஷன இருக்கிறார். அருண தர்ஷணவின் அதிசிறந்த நேரப் பெறுதி 45.30 செக்கன்களாகும்.
தகுதிகாண் சுற்றில் 6 போட்டிகளிலும் முதல் 3 இடங்களைப் பெறும் 18 வீரர்கள் அரை இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெறுவர். ஏனனையவர்கள் Repechage எனப்படும் இரண்டாம் வாய்ப்பு தகுதிகாணில் பங்குபற்றி அவர்களில் மேலும் 6 பேர் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவர்.
128 வருட ஒலிம்பிக் வரலாற்றில் Repchage எனப்படும் இரண்டாம் வாய்ப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இதுவே முதல் தடவையாகும்.