அமேசான் வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் கட்டுப்பாட்டை இழந்த தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
சில விநாடிகளில் விமானம் முழுவதும் தீ பற்றி வெடித்து சிதறிய விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் அர்மின் ஸ்பிரிங்ஸ் என்ற தொழிலதிபர் அவரது 2 பேரன்களும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரேசில் நாட்டின் மடோ கிராஸ்ரோ மாகாணத்தில் அமேசானியன் நகரில் இருந்து ராண்டனொபொலிஸ் நகருக்கு 5 பேருடன் இந்த விமானம் பயணித்துள்ளது.
இதையடுத்து, விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.