அமெரிக்காவின் மிஸ்ஸிஸ்ஸிப்பி மாகாணத்தின் விக்ஸ்பர்க் நகர் பகுதியில் பயணிகள் பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் பலியானதுடன், 37 பயணிகள் காயமடைந்தனர்.
41 பயணிகள் மற்றும் 2 சாரதிகளுடன் அட்லாண்டாவில் இருந்து டல்லாஸ் நோக்கி சென்ற அந்தபஸ், திடீரென கவிழ்ந்ததில் 6 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி உள்ளிட்ட 7 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த பயணிகள் விக்ஸ்பர்க் மற்றும் ஜாக்சன் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஸ்சின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டு உள்ளது என அந்நாட்டின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணைக்குழ தெரிவித்துள்ளது.