தெற்கு இலண்டனில் ஆசிரியரைக் கொலை செய்ததாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
42 வயதான ஜெம்மா டெவோனிஷ், வியாழக்கிழமை அன்று கார்ஷால்டனில் உள்ள நட்ஃபீல்ட் குளோஸில் உள்ள ஒரு வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார்.
அதிகாரிகளும் இலண்டன் ஆம்புலன்ஸ் சேவையும் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், அங்கு டெவோனிஷ் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, திருமதி டெவோனிஷுக்கு தெரிந்த ஜேம்ஸ் மேடன், 38, வெள்ளிக்கிழமை அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.
சனிக்கிழமையன்று அவர் ஆசிரியை கொலைக்கு குற்றம் சாட்டப்பட்ட நிலையில், திங்கட்கிழமை குரோய்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.