காசா நகரின் சைடவுன் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்தனர்.
மேலும், காசாவில் உள்ள அல் அவ்தா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
மருத்துவமனை அருகே உள்ள அகதிகள் முகாமில் பத்திரிகையாளர்கள் படம்பிடித்து கொண்டிருந்தபோது, அவர்களின் வாகனம் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்திய நிலையில், 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றது.