அமெரிக்காவின் அதிகாரப்பூர்வமான தேசிய பறவையாக வழுக்கை கழுகு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஜோ பைடன் கிறிஸ்துமஸ் தினத்தன்று இது தொடர்பான சட்டத்தில் கையெழுத்திட்டார்.
1782 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க ஆவணங்களில் பயன்படுத்தப்படும் – அமெரிக்காவின் பெரிய முத்திரையில் தோன்றும் பறவை பல ஆண்டுகளாக அமெரிக்காவில் தேசிய சின்னமாக உள்ளது.
ஆனால் காங்கிரஸ் கடந்த வாரம் மசோதாவை நிறைவேற்றும் வரை அதிகாரப்பூர்வமாக தேசிய பறவையாக அது அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.
தேசிய கழுகு மையத்துதுக்கான தேசிய பறவை முன்முயற்சியின் இணைத் தலைவர் ஜாக் டேவிஸ் கூறுகையில், “கிட்டத்தட்ட 250 ஆண்டுகளாக, நாங்கள் வழுக்கை கழுகை தேசிய பறவை என்று அழைத்தோம். ஆனால் இப்போது அது அதிகாரப்பூர்வமாக ஆகிவிட்டது” என்றார்.