கவுதமலாவில் நேற்று முன் தினம்பாலத்தின் மீது பயணித்த பஸ், கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது.
இந்த விபத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியானது.
இந்த நிலையில், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தினை அடுத்து, கவுதமலாவில் ஒரு நாள் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.