1
நியூசிலந்தின் தெற்கு பகுதியில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட போதும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
அத்துடன், நிலநடுக்கம் காரணமாக பொருள் மற்றும் உயிர் சேதமும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை.
எனினும், அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் கடற்கரைகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.