செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘வசூல் ராஜா MBBS’ திரைப்பட நடிகர் விபத்தில் மரணம்

‘வசூல் ராஜா MBBS’ திரைப்பட நடிகர் விபத்தில் மரணம்

0 minutes read

சரண் இயக்கத்தில் கமல்ஹாசன், சினேகா, பிரபு, நாகேஷ் பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும், வசூலிலும் பெரியளவில் வெற்றி பெற்ற திரைப்படம் “வசூல் ராஜா MBBS”.

இப்படத்தில் இரசிகர்கள் அனைவராலும் கவனிக்கப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்று ‘சாம்பு மவன்’. இவர் சுவாமிநாதன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், கமல் இவரை “சாம்பு மவனே” என அழைத்தது தான், மக்களிடையே பெரியளவில் பதிவானது.

படம் முழுவதும் what is the procedure to Change the Room என பேசியே, இரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார். வசூல் ராஜா படத்திற்கு பின் அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. அவருக்கு என்ன ஆனது என்றும் தெரியவில்லை.

இந்த நிலையில் ரத்தின சபாபதி எனும் இயற்பெயர் கொண்ட அந்நடிகர், சாலை விபத்தில் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், அவர் பற்றிய மேலதிக தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More