திடீர் சுகவீனம் காரணமாக மூன்று வயது பாலகன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
யாழ். வடமராட்சி, துன்னாலை பகுதியைச் சேர்ந்த வி.சுயாந் என்ற பாலகனே உயிரிழந்துள்ளார்.
மேற்படி பாலகன் கடந்த மாதம் 28ஆம் திகதி வயிற்றோட்டம் காரணமாக சிகிச்சை பெற்ற நிலையில் இந்த மாதம் 4ஆம் திகதி வயிற்று வலி ஏற்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (08) உயிரிழந்துள்ளார்.
இறப்புக்கான கரணம் தெரியாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.