நாம் முதலே பார்த்தத்தின்படி பஞ்சாங்கம் ஐந்து திறன்களை கொண்டுள்ளது. அதனால் தான் அப்பெயரை பெற்றது என்பதை நாம் முன் பதிவில் பார்த்தோம். அந்த ஐந்து திறன்களும் என்னவென்றும் பாப்போம்
அவை வாரம், திதி , கரணம் , நட்சத்திரம், யோகம் போன்றவையாகும்.
முதலில் வரம் ; இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே அவை ஏழு நாட்கள் என்ற சுழற்சயில் வரும் ஞாயிறில் ஆரம்பமாகி சனியுடன் நிறைவு பெற்று மீண்டும் ஞாயிறில் ஆரம்பமாகும்.
அவை ஏழும் ஞாயிறு,திங்கள் செவ்வாய் புதன் வியாழன் , வெள்ளி, சனி.
“ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே” அன்றே கோளாறு பதிகத்தில் திருஞான சம்பந்தர் பாடியமை ஆதாரமாக உள்ளது.
வாரத்தின் முதல் நாளான ஞாயிறு இது சூரியனுக்கு உரிய நாளாக உள்ளது.
திங்கள் அதற்கு அடுத்த நாள் விநாயகருக்குரிய வழிபாட்டுக்குரிய நாள்.
செவ்வாய் முருக கடவலிக்குரிய நாள் இதுவாகும்.
புதன் இந்த நாள் குபேரனை வழிபட சிறந்த நாள்
வியாழன் இது ஐந்தாம் நாள் குருபகவானுக்குரிய நாள்
வெள்ளி ஆறாம் நாள் மகாலட்சுமிக்குரிய நாள் வறுமையில் வாடுபவர் மகாலுக்ஷ்மியை வழிபடலாம்
சனி எல்லாம் நாள் சனிபகவானுக்கே உரித்துடைய நாள் அனுமானுக்கும் விஷ்ணுவிக்கும் ஏற்ற வழிபாட்டு நாள்
சோதிட நூல் ஆதாரம்