அகளங்கன் வவுனியா மாவட்டத்தில் பம்பைமடு என்ற சிறுகிராமத்தை பிறப்பிடமாகக்கொண்ட பல்துறை சார்ந்த இலக்கியப்படைப்பாளியாவார். இவரது இயற்பெயர் நா. தர்மராசா. 1970களில் இருந்து எழுத ஆரம்பித்த அகளங்கன் 2005 வரை இலக்கியம், சிறுகதை, ஆய்வு, கவிதை, நாடகம், சிறுவர் பாடல்கள், கட்டுரைகள் உள்ளடங்கலாக முப்பது நூல்களை வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் -சுதுமலை இந்துசமய விருத்திச்சங்கம் சேக்கழார் இயற்றிய பெரியபுராண படன பூர்த்தி விழா 07-11-2022 திங்கட் கிழமை அன்று சுதுமலை சிவன் கோவிலில் பேருரை வழங்கிய கலாநிதி தமிழ்மணி அகளங்கன் அவர்களுக்கு “ தமிழியல் வாரிதி”எனும் சிறப்புப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் செஞ்சொற் செல்வர் கலாநிதிஆறுதிருமுருகன், கவிஞர் சோ.பத்மநாதன், கலாநிதி கந்தையா ஶ்ரீகணேசன்,விரிவுரையாளர திரு.ஈ.குமரன், திரு.கு. பாலசண்முகன்.திரு.கந்தையாஶ்ரீகந்தவேள் போன்ற அறிஞர்கள் கலந்து சிறப்பித்தனர். செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்கள் பொன்னாடை போர்த்தியும் கவிஞர் சோ.பத்மநாதன் அவர்கள் பட்டம் வழங்கியும் கௌரவித்தனர்