இந்த யோகம் இரண்டு வகையாக பார்க்கப்படுவதுண்டு அதில் முதலாவது சூரிய சந்திரன் சம்பந்தப்படுத்தி பார்ப்பது ஆகும்.
இது ஓர் வான் மண்டலத்தின் ஓர் இடத்திலிருந்து சூரியனுக்கும் ,சந்திரனுக்கும் உள்ள தூரத்தை கூட்டினால் வரும் அவை 27 உள்ளன அவையாவன விஷ்கம்பம் , ப்ரீதி, ஆயுஷ்மான், சௌபாக்யம், சோபனம், அதிகண்டம், சுகர்மம், திருதி, சூலம், கண்டம் , விருதி, துருவம்,வியாகாதம்,ஹர்ஷணம், வஜ்ரம், சித்தி, வியதிபாதம், வரீயான், பரீகம், சிவம்,சித்தம்,சாத்தீயம், சுபம்,சுப்ரம்,பிராம்யம்,ஐந்திரம்,வைதிருதி.
இன்னொரு வகை யோகம் நாளையும் , சந்திரனையும் சம்பந்த படுத்தி வருவதாகும். திங்கள் கிழமை அன்று அஸ்வனி, பரணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம் பூரம், உத்திரம், ஹஸ்தம், அனுஷம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 15 நட்சத்திரங்கள் வருமேயாகில் அன்று சித்தயோகம் வரும். ரோகிணி மிருகசீரிஷம், புனர்பூசம், ஸ்வாதி, திருவோணம் ஆகிய 5 நட்சத்திரங்கள் வந்தால் அமிர்த யோகம் வரும். மீதியுள்ள நட்சத்திரங்களான கார்த்திகை, சித்திரை, மகம், விசாகம், பூராடம், உத்திராடம், பூரட்டாட்தி ஆகிய 7 நட்சத்திரகள் வந்தால் மரணயோகம் ஆகும். சித்தயோகத்திலும், அமிர்தயோகத்திலும் நல்ல காரியங்கள் எல்லாம் செய்யலாம். மரண யோகத்தில் எல்லா நற்காரியங்களும் விலக்கப்படவேண்டும்.