காதுகளுக்கும் கண்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை பைபிளில் இருந்து ஒரு வசனம் இவ்வாறு கூறுகிறது “காது இருப்பவர்கள் கேட்க கடவீர்கள்” இது ஒரு அற்புதமான வசனம்
காது கண் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உங்களால் சொல்லமுடியுமா சொல்ல முதற்படின் இவ்வாறு சொல்லலாம் கண்கள் தேடிச் சென்று பெறுபவை, காது இருந்த இடத்தில் இருந்தே பெற்று கொள்ளும்.
ஆம் ஒன்றை நாம் காண அந்த உரிய இடத்தை கட்டாயம் நாடி சென்றே ஆக வேண்டும் ஆனால் காதுகளுக்கு அந்த வேலை எதுவுமே இல்லையே ஒருவர் இருந்த இடத்தில் இருந்து கொண்டு யார் எதை சொன்னாலும் காது கேட்டு கொண்டு தான் இருக்கும்.
காதுகளில் அத்தனையும் தானாக வந்து விழும் இங்கே கண்களை நாம் மூடிபோட்டு மூட முடியும் ஏன் என்றால் அதற்கு இமைகள் என்னும் மூடிகள் இருக்கின்றன. ஆனால் காதினை நினைத்தால் தான் மூடிக்கொள்ள முடியும் மற்றும்படி நல்லவை கேட்டவை என்று அனைத்தும் அதன் காதில் விழுந்தே தீரும்.
எனவே தான் பெரியவர்கள் கூறுகின்றனர் காதை எவன் ஒருவன் காத்துக்கொள்கிறானோ ( தேவையானவை தேவை இல்லாதவை என்பவற்றை தானே முடிவு செய்து கேட்டல் ) அவனே வாழ தகுதியானவன். ஏனையவர் காதில் அனைத்தையும் வீழ்த்தி துன்ப நிலையை அடைகின்றனர்.