புகைப்படத் தொகுப்பு

Home ஆன்மிகம் மர வேர்கள் தாங்கி நிற்கும் மாயக் கோவில்

மர வேர்கள் தாங்கி நிற்கும் மாயக் கோவில்

3 minutes read
கோவில் சுவர்களுக்குள்ளும், கோபுரங்களுக்குள்ளும் நுழைந்து வேர்விட்டு அசுர வளர்ச்சியுடன் எழுந்து நிற்கும் மரங்களின் பிரம்மாண்டம், இடிபாடுகளுடன் கூடிய பழங்கால கோவிலை மரக்கிளைகளும் வேர்களும் தாங்கி நிற்கின்றனவா அல்லது கோவில் சுவர்களுடன் பின்னி பிணைந்திருக்கும் மரங்களை கல் சுவர்கள் தாங்கி நிற்கின்றனவா என மனதில் தோன்றும் ஐயம், நீண்ட, இருண்ட முற்றங்கள், கற்குவியலாய் இடிபாடுகள், குறுகிய நடைபாதைகள் நிறைந்த முற்றிலும் அறிந்திராத ஒரு மர்ம பிரதேசத்திற்குள் நுழைகிறோமா என்ற எண்ணம் ஏதோ ஒரு மாயங்கள் நிறைந்த கற்பனை உலகத்திற்கு அழைத்துச் செல்லும் அனுபவத்தையும் பரவசத்தையும் ஒவ்வொரு பார்வையாளருக்கும்  ‘தா ப்ரோம்’ ( Ta Prohm – Ancestor Brahma  எனப்பொருள்படும்  Tā Brahm)  ஆலயம் கண்டிப்பாக அளிக்கும்.
கம்போடியாவில் உள்ள பல பழங்கால கோவில்கள் சிவன் மற்றும் விஷ்ணு வழிபாட்டிற்கான இந்து கோவில்களாகும். ‘மஹாயான’ பௌத்தத்தைப் பின்பற்றிய மன்னர் ஏழாம் ஜெயவர்மனால் ‘தா ப்ரோம்’ ஒரு புத்த கோவிலாக பொ.ஆ.1186 இல் ‘ராஜவிஹாரா’ என்ற பெயரில் கட்டப்பட்டது.
15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் கெமர் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் நீளம், 600 மீட்டர் அகலம் கொண்ட பிரம்மாண்டமான இந்த ‘தா ப்ரோம்’ ஆலயம் கவனிப்பாரின்றி கம்போடிய காடுகளால் விழுங்கப்பட்டது.
மேற்பூச்சு, இணைப்பு  பூச்சுகள் இல்லாமல் கட்டப்பட்ட கோயிலின் மேற்புறங்களில் வேர்  விட்ட  மரங்கள்
 நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, இடிபாடுகளினூடே வளர்ந்து,  கல் சுவர்களை இடித்து பெரிதாகி, கோவில்களை முற்றிலும் ஆக்கிரமித்து, தா ப்ரோமிற்கு ஒரு மாறுபட்ட அழகையும் மர்மத்தையும் அளிக்கிறது.
‘தா ப்ரோம்’  வளாகத்தினுள் உள்ள ஒவ்வொரு கோவிலும்  ஒவ்வொரு விதமான மரங்களினால் (Silk cotton trees,  strangler fig trees) சூழப்பட்டுள்ளது.
2018 இல் வெளியான பிரபல ஹாலிவுட் திரைப்படமான ‘Tomb Raider’ படக்காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டதிலிருந்து இக்கோயில்  புகழ் வெளிச்சத்திற்கு வந்தது.
கம்போடியாவின் சீம் ரீப்பில் உள்ள கோவில் வளாகங்களுள், புகைப்படக்கலைஞர்களுக்கு மிகவும் விருப்பமான(photogenic) ஆலயம்ஆகும் .
 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More